இளையராஜா பாடலுக்கு வைப் ஆன மாணவிகள்..! ‘காப்பிரைட் வாங்கிட்டீங்களா?’.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

0
112

தமிழ் சினிமாவில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குணா’. இந்த படத்தை சந்தான பாரதி இயக்கியிருந்தார். மேலும், இந்த படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரும் ‘கண்மனி அன்போடு காதலன்’ என்ற பாடல் அப்போதைய காலக்கட்டத்திலேயே பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்தது.

தற்போது மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் மூலம் இந்த பாடல் மீண்டும் வைரலாகி 2k கிட்ஸ் வரை ரீச் ஆகியுள்ளது. இந்த நிலையில், ‘கண்மனி அன்போடு காதலன்’ என்ற பாடலை வந்தே பாரத் ரயிலில் பயணித்த இளம்பெண்கள் குழுவாக சேர்ந்து பாடி வைப் ஆகியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “ சென்னை – மைசூர் சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலில் இளம்பெண்கள் தங்கள் இனிமையான பாடல்களால் தங்கள் பயணத்தை இசைப் பயணமாக மாற்றியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இளையராஜாவின் பாடலை பாடி மகிழும் இளம்பெண்கள், இந்த பாடலை பாடுவதற்கு இளையராஜாவிடம் முறையான அனுமதி பெற்றுள்ளீர்களா என கலாய்த்து வருகின்றனர்.

முன்னதாக, தனது பாடலை யாரும் பயன்படுத்தகூடாது என்றும் காப்பிரைட் கிளைம் செய்வதாகவும் இளையராஜா அறிவித்தார். அதன்பேரில், சினிமா, மேடை கச்சேரி என அனைத்து இடங்களிலும் இளையராஜா பாடல்களை தவிர்த்த ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக தற்போது வந்தே பாரத் ரயிலில் பாடல் பாடிய இளம்பெண்களிடம், இளையராஜா கண்ணில் பட்டாயம் கட்டாயம் காப்பிரைட் கேட்பார் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here