விஜய், அஜித்திடம் கதை கூறிய ஸ்டண்ட் சில்வா..! அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்குவதாக தகவல்..!

0
142

தமிழ், தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, பெங்காலி மற்றும் சிங்களம் என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றிவர் ஸ்டண்ட் சில்வா.

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அரியப்படுபவர் ஸ்டண்ட் சில்வா. தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

மேலும், இவர் 2022ஆம் ஆண்டு ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற கருத்தை இந்த படத்தில் முன்வைத்தார்.

இந்த நிலையில் இவர் அடுத்தாக ஒரு படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாக்கியுள்ளது. மேலும், இந்த படம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் ஹாலிவுட் பாணியிலான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர்கள் விஜய், அஜித் இருவரிடமும் கதையை சொல்லிவிட்டு ஒப்புதலுக்காக இயக்குநர் காத்திருப்பதாகவும். ஒரு வேளை இருவரும் ஒத்துக்கவில்லை என்றால் அடுத்ததாக அந்த கதையை அருண் விஜய்யை வைத்து இயக்கவுள்ளதாக தெரிகிறது.

மேலும் இவர் சிறந்த சண்டை காட்சிகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் மற்றும் மிஷன் சேப்டர் 1 படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறப்படுவதால் ஸ்டண்ட் சில்வா பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here