சுதீப்பை வைத்து வெங்கட் பிரபு இயக்கவிருந்த படம் என்ன ஆனது?.. ரசிகர்கள் கேள்வி..!

0
90

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து ‘The Greatest of All Time’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு எந்த படத்தை இயக்கவுள்ளார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஏனென்றால், முன்ந்தாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு கன்னட முன்னணி நடிகர் சுதீப்பை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஒரு நாள் பெங்களூரு சென்ற வெங்கட் பிரபுவை சுதீப் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் கொடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

அந்த சமயம் மாநாடு படம் முடிவடையும் நிலையில் இருந்தது. பின்னர், மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து, சுதீப்பை வைத்து வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் ரிலீஸ் ஆகிய பின்னர் சுதீப்பை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார்.

விஜய் படத்தை தொடர்ந்து சுதீப்பை வைத்து படம் இயக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை. மேலும், அந்த படம் வெறும் செய்தி அளவிலேயே கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சமூக வலைத்தளத்தின் மூலம் நடிகர் சுதீப் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சுதீப்பிடம் ரசிகர் ஒருவர், ‘வெங்கட் பிரபு இயக்கத்தில் நீங்கள் நடிக்க இருந்த படம் என்ன ஆனது?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுதீப் ‘வெங்கட் பிரபுவை காணவில்லை’ என பதிலளித்தார். இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக சுதீப்பை வைத்து இயக்குவாரா அல்லது வேறு படத்தை இயக்குவாரா என சுதீப் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here