Unlimited-க்கு 1000 ரூபாய்கு கொடுத்தால் போதும்..! சன்னி லியோன் அறிவித்த ஆஃபர்..!

0
98

Sunny Leone: சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்து தொடர்ந்து பல படங்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வெளியான ‘வட கறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மேலும், சில தமிழ் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கி தொழிலதிபராக களமிறங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு ‘சிக்கா லோகா’ என்று பெயர் வைத்துள்ளார்.

விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டிருக்கிறார். சுமார் 7ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் இந்திய, ஆசிய, ஐரோப்பிய மற்றும் இத்தாலிய உணவு வகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும் அனைத்து வகையான உணவுகளையும் அன்லிமிட்டெட் ஆக சாப்பிடலாம் என ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சன்னி லியோனின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: PUBG விளையாட்டால் தொடரும் விபரீதங்கள்..! சென்னை மாணவர் உயிரிழப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here