சன்னி லியோன் கையில் சுட்ட தீ.. வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..

0
98

Sunny Leone: சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்து தொடர்ந்து பல படங்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வெளியான ‘வட கறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

மேலும், சில தமிழ் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சன்னி லியோன் ஒரு வீடியோவில், “என்னை ஆபாச பட நடிகை என்ற கோணத்திலேயே இன்னும் பார்க்கின்றனர். இது எனக்கு வருத்தமாக உள்ளது” என தெரிவித்திருந்தார்.

மேலும், டெல்லியில் ஒரு ஹோட்டலும் திறந்திருக்கிறார். இப்படி சினிமாவிலும், பிசினஸிலும் பிஸியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

இந்த வீடியோவை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில், சன்னி லியோன் பூஜையை தொடங்கி வைக்கிறார். அப்போது அவரது கையை தீ சுடுகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில், “இந்த மலையாள படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here