‘Sunny Leone’: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று (பிப்.17) காவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு 75 மாவட்டங்களில் 2ஆயிரத்து 385 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
அப்போது, தேர்வு எழுத வந்த நபர் ஒருவரின் அனுமதிச் சீட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரும், அவரது புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
இதனைக்கண்டு அதிர்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த விண்ணப்பப் படிவத்தில் இருந்தது போலியானது என தெரியவந்தது. தொடர்ந்து, சில நபர்களின் தவறான செயலே இந்த குழப்பத்திற்குக் காரணம் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.