தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். தியா மற்றும் தேவ் ஆகியோர் தற்போது மும்பையில் படித்து வருகின்றனர்.
இதில் சூர்யாவின் மகளான தியா, 10ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றார். படிப்பில் சிறந்து விளங்கும் தியா 10ஆம் வகுப்பு வரை சென்னையில் படித்த நிலையில் 11ஆம் வகுப்பிற்கு முதல் மும்பையில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தியா விளையாட்டிலும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் தியா பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டேவில் தியா வெற்றிப்பெற்று பதக்கம் பெற்றிருக்கிறார்.
இந்த விழாவைக் காண்பதற்காக சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்றிருந்தனர். அப்போது ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டனாக இருந்த தியா அசத்தலாக விளையாடி பதக்கத்தை வென்றிருக்கிறார். பதக்கம் வென்ற மகிழ்ச்சியோடு தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அவதூறு வழக்கு: கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!