சூர்யா பட இயக்குநருடன் கை கோர்க்கும் சிம்பு.. மிரட்டலாக உருவாகும் 50ஆவது படம்..

0
86

‘STR 50’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘பத்து தல’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘STR 48’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘STR 48’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து, தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிப்பதாக சிம்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

2004ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ திரைப்படத்திற்கு சிம்பு திரைக்கதை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுதான் அவருடைய ஐம்பதாவது படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது. தற்போது அவர் நடித்து வரும் STR 48ஆவது திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிம்புவின் 50ஆவது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தனது 50ஆவது படத்தை மாபெரும் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுதா கொங்கராவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை சிம்புவிக்கு பிடித்திருப்பதாக உடனே படத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

முன்னதாக சுதா கொங்கரா சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கினார். அந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இப்போது மீண்டும் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை முடித்த பிறகு சிம்புவை வைத்து 50ஆவது படம் எடுக்கப்படு என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here