விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!..

0
95

Suriya paid tribute to Vijayakanth: கேப்டன் விஜயகாந்த கடந்த டிச.28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மறைந்த விஜயகாந்த்தின் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியாத நடிகர்கள் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சூர்யா நேற்று சென்னை திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து இன்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்த நடிகர் சூர்யா தேம்பி தேம்பி அழத்தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா, “அண்ணனோட இந்த பிரிவு மிகவும் துயரமானது, மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. சினிமாவில் ஆரம்பக் கட்டத்தில் நான் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது தான் விஜயகாந்த் அண்ணன் கூட சேர்ந்து ‘பெரியண்ணா’ என்ற படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் ஒரு 10 நாள்கள் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் சகோதரர்போல் என்னை அவர் கவனித்துக்கொள்வார். சாப்பிடும் போது அவருடைய இலையில் இருந்த சாப்பாட எடுத்து எனக்கு ஊட்டி விட்டார். அந்த அளவிற்கு என்னை ஒவ்வொரு நாளும் கவனித்துக்கொண்டார். அவருடன் அமர்ந்து பல மணி நேரம் பேசவேண்டும் என நான் நினைத்தது தற்போது நடக்கவில்லை.

அவரைப்போல் யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. அவரது இறுதி அஞ்சலியில் என்னால் கலந்துகொண்டு அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. அண்ணனோட இழப்பு மிகப்பெரிய துன்பமாக உள்ளது. அண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தொண்டர்களும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் அவருடைய நினைவுகள் இருக்கும், அண்ணனோட ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ‘நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் பெயர் சூட்ட வேண்டும்’ – சசிகுமார் வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here