‘சூர்யா 44’ விரைவில் ஷூட்டிங்.. இசையமைப்பாளர் யார் தெரியுமா?..

0
123

Suriya 44: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்தின் டீசர் உலக அளவில் டிரெண்டானது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர். தொடர்ந்து இந்த படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 44ஆவது படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை சூர்யாவின் ‘2D’ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்த போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சூர்யா 44 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், இந்த படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here