இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் கங்குவாவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ படத்தில் சூர்யா நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக இவரது இயக்கத்தில் சூர்யா ‘சூரரைப் போற்று’ படத்த நிலையில் தற்போது மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்கியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, படப்பிடிப்பில் நடிகர் சூர்யா இணைவார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது புறநானூறு படம் குறித்து சூர்யா தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புறநானூறு படத்தை தொடங்க அதிக நேரம் தேவைப்படுகிறது.
எங்களால் முடிந்த அளவு உங்களுக்கு இந்த படத்தை விரைவில் கொடுக்க முயல்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.