குதிரை சவாரி பயிற்ச்சியில் சூர்யா.. எந்த படத்திற்காக தெரியுமா?..

0
96

Actor Suriya: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்தின் டீசர் உலக அளவில் டிரெண்டானது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர். தொடர்ந்து இந்த படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்திற்கு சூர்யா சம்பளம் வாங்காமல் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யாவுக்கும், கார்த்திக் சுப்புராஜுக்கும் லாபத்தில் பங்கு இருப்பதால் இப்போதைக்கு சம்பளம் பேசாமல் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யா குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கங்குவா படத்தில் குதிரையுடன் சூர்யா நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஏன் அவர் குதிரை சவாரி பயிற்ச்சியில் ஈடுபடுகிறார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், சூர்யாவின் 44ஆவது படத்திற்காக தான் இந்த குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here