‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் சூர்யா பட வில்லன்.. ஷூட்டிங் எப்போ தெரியுமா?..

0
75

Good Bad Ugly: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் அஜர்பைஜான் செல்ல இருக்கிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து, விஷால், எஸ்,ஜே,சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என அனைவருக்கும் தெரியும், அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது அஜித்திடம் கதை கூறியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போனதால் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த புதிய படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்திற்கு 163 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருக்கும் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

முன்னதாக பாலிவுட்டில் பல படங்களில் தனது மிரட்டலான நடிப்பை காட்டியிருப்பார். இந்த நிலையில் தற்போது தமிழில் அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் குறித்த அப்டேட் அஜித்குமாரின் பிறந்த நாளானா மே 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here