கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா..! திரளாக திரண்ட ரசிகர் கூட்டம்..!

0
122

Suriya: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்தின் டீசர் உலக அளவில் டிரெண்டானது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர். தொடர்ந்து இந்த படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா நடிக்கும் 44ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘சூர்யா 44’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

இப்படி படங்களில் தன்னை பிஸியாக வைத்திருக்கும் சூர்யா நேற்று (ஏப்ரல் 3) ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். சூர்யாவின் வருகையை அறிந்த ரசிகர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.

தொடர்ந்து சூர்யா வெள்ளை சட்டை, வேட்டை அணிந்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த சூர்யா அங்கு கூடிய தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here