விஜய்யின் கட்சி பெயரில் பிழை?.. சுட்டிக்காட்டிய எஸ்.வி.சேகர்..!

0
107

‘S.V.Sekhar’: நடிகர் விஜய் இன்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் விஜய் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள். அடையாளம் தெரிந்த வில்லன்களைவிட அடையாளம் தெரியாத முக மூடிகளுடன் இருக்கும் வில்லன்களே அதிக ஆபத்து. எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்களே அறிவியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பதிவின் முடிவில், ‘தமிழக வெற்றி (க்) கழகம்’. ‘க்’ உண்டா இல்லையா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், விஜய் வெளியிட்ட அறிக்கையிலும் ‘தமிழக வெற்றி கழகம்’ என்றே குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே எஸ்.வி.சேகர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here