Swayam Siddha Das: தமிழ் ரசிகர்களிடம் ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரீஸில் நடித்தன் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டவர் ஸ்வயம் சித்தா தாஸ். இவர், தற்போது ‘அக்காலி’ என்ற படத்தின் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார். மேலும், பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ஜெயக்குமார் நடிக்குமார்.
மேலும், இந்த படத்தில் வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கிரி மர்பி ஒளிப்பதிவு செய்கிறார். அனிஷ் மோகன் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் கூறும்போது “அக்காலி என்பதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள். அப்படி ஒரு சிலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதையே கதையின் மூலக் கருவாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு திரில்லர் படம். இதில், நடிகை ஸ்வயம் சித்தா தாஸ் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். மேலும், இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது” என்றார்.