‘விஜய் அரசியல் குறித்து பண்ண விரும்பல விமர்சனம், நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்’ – TR வாழ்த்து..!

0
102

T Rajendar : நடிகர் விஜய் நேற்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயரை வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையும் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்திரன், விஜய் அரசியல் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, “அரசியல் என்பது ஒரு பொது வழி, இதில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

இந்த சூழ்நிலையில் நான் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து ‘பண்ண விரும்பவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம்’ என கூறிவிட்டுச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here