நடிகை தமன்னா கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை நடிகை தமன்னா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். நடிகை தமன்னா சமீபகாலமாக அவ்வப்போது ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருகிறார். அந்த வகையில் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலுக்கும் சென்றிருக்கிறார்.
நடிகை தமன்னா ஜெயிலர் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கும் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.