‘Byri’: ‘பைரி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ரிலீஸான நிலையில் இந்த படத்திற்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என மற்ற பட இயக்குநர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பைரி’. இந்த படத்தை டி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் வில்துரைராஜ் தயாரிக்கிறார்.
இந்த படம் புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து, இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி ரிலீஸானது.
‘பைரி’ படம் ரிலீஸான நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து, மற்ற இயக்குநர்களும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புதுமுக நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ளதாகவும், கட்டாயம் தேசிய விருது பெறும் எனவும் இயக்குநர்கள் கூறி வருகின்றனர்.