தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: விண்ணபிக்க கால அவகாசம் நீடிப்பு..!

0
115

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்து வழங்க வேண்டும் என திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாடு அரசின் சார்பில் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022 ஆம் ஆண்டுவரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் மற்றும் 2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை சின்னத்திரை விருதுகள் வழங்கப்படும்.

அதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 24ஆம் தேதி முதல் வருகிற 8ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக் கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாளை வருகிற 31ஆம் தேதி அன்று மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கேப்டன் மகனுடன் நடிக்க தயார்.. நல்ல கதை கொண்டுவாங்க..’ – நடிகர் லாரன்ஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here