தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள்கள் பயணமாக இன்று (பிப்.04) டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டார்.
டெல்லியில் அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 12ஆம் தேதி ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க இருக்கும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தன்னார்வலர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய நடிகர் கார்த்தி..!