‘X’ தளத்தில் டிரெண்டிங்காகும் ‘தமிழக வெற்றி கழகம்’ ஹேஷ்டேக்..!

0
88

நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் விரைவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி, நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மூன்று பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் என்பது தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யும் சேவை’ என கூறியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த ஒரு சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் கட்சியின் பெயர் டிரெண்டாக தொடங்கியது.

அதன்படி, ‘X’ தளத்தில் ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியாகி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விஜய் அரசியலில் களம் இறங்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பெறும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here