அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் நிறைவு..!

0
126

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப் பூர்வமான தகவலை வெளியிட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு இடத்தில் விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here