செல்வராகவன் பிறந்தநாள்: வாழ்த்து கூறிய ‘ராயன்’ டீம்..!

0
94

Selvaraghavan: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் போஸ்டர்களை வரிசையாக படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு தனுஷின் சகோதரர் செல்வராகவன் திரைக்கதை எழுத உதவியதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது செல்வராகவன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ படத்திற்கு நான் கதை எழுதியதாக தகவல் பரவி வருகிறது.

ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் ‘ராயன்’ படத்தில் நான் எதுவுமே செய்யவில்லை, இது தனுஷின் கனவு கதையாகும். இந்த கதை முழுக்க முழுக்க தனுஷால் உருவாக்கப்பட்டது. நான் இந்த படத்தில் ஒரு நடிகர் மட்டும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் காரணமாக ராயன் படக்குழு செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் வெளியிட்டது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here