‘டீன்ஸ்’ பட பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்..!

0
121

TEENZ First Single: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்தி டீன்ஸ் (TEENZ) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வரிசையாக வெளியிட்டது.

இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டீன்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காணாததை நான் கண்டேனே’ என்ற பாடல் மார்ச் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டி.இமான் இசையில் வெளியாகவுள்ள இந்த பாடலை ஏ.அர்.ரகுமான் வெளியிடுகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குநர் பார்த்திபன் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இசையை, இனிமையை, அன்பை, காதலை, நட்பை, உச்சப்படுத்தும் A.R.R அவர்களுக்கு இதய நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இந்த ‘காணாததை நான் கண்டேனே’ என்ற பாடல் பார்த்திபன் வரிகளில், ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து, அந்த பதிவில் இது குறித்த போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ‘டீன்ஸ்’ படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here