TEENZ Teaser: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்தி டீன்ஸ் (TEENZ) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வரிசையாக வெளியிட்டது.
சமீபத்தில் ‘டீன்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காணாததை நான் கண்டேனே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இந்த நிலையில், தற்போது படத்தின் பரபரப்பான டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.