இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்தி டீன்ஸ் (TEENZ) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் முதல் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, நடிகை கிருத்திகா ஐயர் ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்த வீடியோ ஒன்றையும் பார்த்திபன் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 13 நாட்களுக்கு, படத்தின் 13 கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.