கார் விபத்தில் உயிரிழந்த தெலங்கானா எம்எல்ஏ..!

0
130

தெலங்கானா மாநிலத்தில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் இவர் தலையில் காயத்துடன் தப்பியிருந்தார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் லாஸ்யா நந்திதா. இவர், படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓஆர்ஆர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கார் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக நார்கட்பள்ளி அருகே லாஸ்யா நந்திதா சென்ற கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் நடத்த அடுத்த 10 நாட்களில் ஏற்பட்ட இந்த விபத்தில் லாஸ்யா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here