பாலகிருஷ்ணாவிற்கு ஜோடி இந்த நடிகையா?.. வெளியானது புதிய படத்தின் அப்டேட்..!

0
68

Nandamuri Balakrishna NBK 109: தெலுங்கில் இயக்குநர் பாபி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது 109ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்லோ ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டாக, இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் வெளியான அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’, விஷாலின் ‘சக்ரா’ மற்றும் விக்ரம் வேதாவில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது பாலகிருஷ்ணா படத்தில் இணைந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here