பவதாரிணி மறைவு: இளையராஜாவுக்கு ஆறுதல் கூறிய தெலுங்கு நடிகர் மோகன்பாபு..!

0
113

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜன.25ஆம் தேதி மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்திருக்கிறார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அதிர்ச்சியாக இருந்தது. இதயம் உடைந்த தகவலைக் கேட்டபின் இளையராஜாவை சந்தித்து அவரது மகள் பவதாரிணி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தாருக்கு கடவுள் சக்தியைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here