ஷாஹித் கபூர் படத்தின் டைட்டில் டிராக் ரெடி..! படக்குழு அறிவிப்பு..!

0
73

#TeriBaatonMeinAisaUljhaJiya: ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’. இந்த படத்தை அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் எழுதி இயக்கியுள்ளனர். இந்த படம் மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே நடக்கும் வித்தியாசமான காதலை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து, ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’ படத்தின் முதல் பாடலான லால் பீலி அன்கியான் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் இரண்டாவது பாடலான ‘அகியான் குலாப்’ பாடல் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’ டைட்டில் டிராக் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குநர் அமித் ஜோஷி தனது ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’ படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here