வெளியானது ஷாஹித் கபூர் படத்தின் டைட்டில் டிராக்..!

0
151

#TeriBaatonMeinAisaUljhaJiya: ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’. இந்த படத்தை அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் எழுதி இயக்கியுள்ளனர்.

இந்த படம் மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே நடக்கும் வித்தியாசமான காதலை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’ டைட்டில் டிராக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக ‘தேரி பாடன் மே ஐசா உல்ஜா ஜியா’ படத்தின் முதல் பாடலான லால் பீலி அன்கியான் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் இரண்டாவது பாடலான ‘அகியான் குலாப்’ பாடல் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here