‘Test’ படப்பிடிப்புகள் நிறைவு..! வீடியோ வெளியிட்ட படக்குழு..!

0
84

‘Test Movie Update’: தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிப் படமான ‘மண்டேலா’ படத்தை தயாரித்த சசிகாந்த் தற்போது ‘டெஸ்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி ‘டெஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வமான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் ‘TEST – It’s A WRAP!’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த ‘டெஸ்ட்’ திரைப்படம் கோடையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகும் நிலையில் இந்த ‘டெஸ்ட்’ படத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் நடிக்கும் ‘பர்த் மார்க்’ படம்..! வைரலாகும் ‘போர் தீருமா’ பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here