‘Thalaivar 171’ அப்டேட்..! ரஜினிக்கு நெகட்டிவ் ரோல்..! லோகேஷின் சம்பவம் உறுதி..!

0
284

Thalaivar 171: ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிடப்பட்டது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது தலைவர் 171 படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், எந்திரன் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதால் அவரது நடிப்பைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here