‘Thalaivar 171’ படத்தில் SK நடிப்பது உறுதியா?.. – அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!..

0
138

Sivakarthikeyan in Thalaivar 171: தமிழ் சினிமாவில் நம்ம வீட்டு பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக தமிழ்த் திரைப்பட நடிகரானார். தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.

காமெடி கலந்த எதார்த்தமான நடிப்பால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருக்கிறார். இவர், மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் எதார்த்தமான காமெடி கதாநாயகனாக நடித்து வந்தார்.

இவரது நடிப்பைக் கண்டு தனுஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் எதிர்நீச்சல் இந்தப் படம் சிவகார்த்திகேயன் கெரியரில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் டையர் 2, டையர் 3 என கூறப்படும் மக்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

முன்னதாக அவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்ததன் காரணமாக அனைவராலும் அறியப்படக் கூடிய ஒரு நபராக இருந்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டர்.

காமெடி கலந்த எதார்த்த நடிப்பால் தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். இடையில் சிவகார்த்திகேயன் சில தோல்விப் படங்களை கொடுக்க, அவரது கெரியல் அவ்வளவுதான் என மக்கள் பேசத் தொடங்கினர்.

அதனை அடித்து நொறுக்கும் விதமாக ‘டாக்டர்’, ‘டான்’, ‘மாவீரன்’ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அவரது ‘அயலான்’ திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று (டிச.26) நடைபெற்றது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டுள்ளார். அதில், ‘லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் நீங்கள் இருப்பதாக கூறுகிறார்களே?’ என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த சிவகார்த்திகேயன், “அது வெறும் செய்தியாகவே உள்ளது. எதுவும் உண்மை இல்லை, தலைவர் கூட நடிக்கிறதுக்கு எப்பவுமே நா ரெடி. அது ஒரே ஒரு சீனாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அவர் கூட நடிக்கிறதை விட ஒரு FanBoyக்கு வேற என்ன சந்தோசம் இருக்க முடியும்” என கூறியிருக்கிறார்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மை இல்லை என சிவகார்த்திகேயனின் இந்த பதில் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், கட்டாயம் அவர் நடிப்பதாக இருந்தால் சில மாதங்களில் அதன் அப்டேட் வெளியாகும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: ‘அயலான்’ இசை வெளியீட்டு விழா..! மாஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here