‘Thalaivar 171’ – ரஜினியுடன் நடிக்க முடியாது.. ஷாருக்கான் இப்படி கூற காரணம் என்ன..?

0
63

‘Thalaivar 171’: ‘தலைவர் 171’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினி நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளார். ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், தற்போது தலைவர் 171 படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிக்க ஷாருக்கான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

‘தலைவர் 171’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க லோகேஷ் கனகராஜ் ஷாருக்கானை அனுகியுள்ளார். ஆனால், அவர் கேமியோ ரோலில் நடிப்பதில்லை எனவும் தனது ரசிகர்கள் அதனை விரும்பமாட்டார்கள் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க ரன்பீர் கபூர் லோகேஷ் கனகராஜ் அனுகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கேமியோ ரோலுக்கு ஓகே சொன்னாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here