வைரலாகும் ‘லால் சலாம்’ Thalaivar Swag பாடல்..!

0
124

Thalaivar Swag: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லைகா நிறுவனம் ‘லால் சலாம்’ Thalaivar Swag பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘லால் சலாம்’ ஷூட்டிங் ஸ்பாட், ரஜினி இதுவரை நடித்த படங்கள் உள்ளிட்டவற்றை வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் Fan Made Song என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here