‘Thalapathy 68’ – ‘தளபதி 68’ படத்தின் உண்மையான டைட்டில் இதுதானா?.. மாஸா இருக்கே..!

0
98

‘Thalapathy 68 Titile’ : ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் நாள்தோறும் வெளியாகிவரும் நிலையில் முன்னதாக படத்திற்கு ‘Boss’ , ‘Puzzle’ என கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு கூறியிருந்தது. இதனிடையே, ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘Boss’ அல்லது ‘Puzzle’ என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ‘X’ வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தளபதி 68 படம் குறித்த அனைத்து அப்டேட்டுகளையும் பார்த்தேன். அன்புக்கு நன்றி, நிதானமாக இருங்கள் வெங்கட் பிரபு சிறப்பான ஒன்றை தயார் செய்திருக்கிறார். இது நிச்சயமாக ‘Boss’ அல்லது ‘Puzzle’ கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தியின் இந்த ட்வீட் மூலம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும் டைட்டில் உண்மையானது அல்ல என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னெவென்றால் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் G.O.A.T என தகவல் வெளியாகியுள்ளது.

Greatest of all Time (G.O.A.T) என்பதே இதற்கு அர்த்தம் என கூறப்படுகிறது. யார் ஒருவர் அனைத்து விடயங்களிலும் சிறப்பாக செயல்படுகிறாரோ அவரை G.O.A.T என அழைப்பது வழக்கம். அந்த வகையில் இப்படத்திற்கு G.O.A.T என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்து படக்குழு டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள தலைப்பு உண்மையானதா என தெரியவில்லை. இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here