‘Thalapathy 68’ படத்தின் டைட்டில் ‘Boss’, ‘Puzzle’ இல்லை..! புதிய டைட்டில் அறிவிப்பு.. அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்!

0
121

‘Thalapathy 68’: நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் லீக் ஆகியுள்ளதால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு கூறியிருந்தது. இதனிடையே, ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘Boss’ அல்லது ‘Puzzle’ என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ‘X’ வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தளபதி 68 படம் குறித்த அனைத்து அப்டேட்டுகளையும் பார்த்தேன். அன்புக்கு நன்றி, நிதானமாக இருங்கள் வெங்கட் பிரபு சிறப்பான ஒன்றை தயார் செய்திருக்கிறார்.

இது நிச்சயமாக ‘Boss’ அல்லது ‘Puzzle’ கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த ட்வீட் மூலம், சமூகவலைத்தளங்களில் பரவி வரும் டைட்டில் உண்மையானது அல்ல என்பது தெரியவந்துள்ளது. மேலும், ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here