Thalapathy 68 update: 10 நிமிட காட்சிக்கு ரூ.6 கோடி செலவு..! ரசிகர்களுக்கு ட்ரீட் கன்பார்ம்..!

0
119

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படத்தில் வரும் 10 நிமிட காட்சிகளுக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் 67ஆவது படமான லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அடுத்ததாகத் தளபதி 68ஆவது படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைந்திருக்கிறார். இந்த படத்தைப் பிரபலமான ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

வெங்கட் பிரபு, சிம்பு வைத்து எடுத்த மாநாடு திரைப்படம் ஒரு டைம் ட்ராவலை மையாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் இந்த படமும் டைம் ட்ராவலை வைத்து தான் கதை அமையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அவர்களுக்கு மேலும் ஹைப்பை ஏற்படுத்துவதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு தகவலை வெளியிட்டார். அதில், ‘இதுவரை பார்த்திடாத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். மேலும், இந்த படத்தில் தந்தை – மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிக்கு ரூ.6 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 10 நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் விண்டேஜ் விஜய் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் இளமையான தோற்றத்தைக் கொண்டுவர டீ-ஏஜிங் (De – Aging technique) பிராசஸ் எனப்படும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகத்தான் 6 கோடி ரூபாய் செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செலவிற்கு ஏஜிஎஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், வின்டேஜ் விஜய்யைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here