‘தளபதி 68’ டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!..

0
138

Thalapathy 68: ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகிவரும் நிலையில் முன்னதாக படத்திற்கு ‘Boss’ , ‘Puzzle’, ‘G.O.A.T’ என கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68ஆவது படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியிடுவதாகப் படக்குழு கூறியிருந்தது. இதனிடையே, ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘Boss’, ‘Puzzle’, ‘G.O.A.T’ என சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் உண்மையான டைட்டிலை இய்குநர் வெங்கட் பிரபு தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் ‘The Greatest of all Time’ எனக் குறிப்பிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக படத்தின் டைட்டில் G.O.A.T எனவும் அதற்கு விரிவாக்கமாக Greatest of all Time எனவும் தகவல் வெளியாகியிருந்தது. பின்னர், படத்தின் டைட்டில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டைட்டிலை மாற்ற படக்குழு திட்டமிட்டது.

ஆனால், படக்குழுவினர் G.O.A.T என லீக் ஆன டைட்டிலை மாற்றி ‘The Greatest of all Time’ என வெளியிட்டுள்ளது. ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நடிகர் விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here