‘ஒரு வாழ்த்து சொன்னது குத்தமா?..’ தெலுங்கு இயக்குநரை ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்!

0
83

Thalapathy 69: அரசியலுக்கு வந்த விஜய்க்கு தெலுங்கு இயக்குநர் வாழ்த்து கூறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இந்த இயக்குநர் தான் இயக்கப்போகிறார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ‘RRR’ படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா. தற்போது விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும், இதனால் டிவிவி தனய்யா தயாரிப்பில் விஜய் நடிப்பது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாக இருப்பதாகவும், படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், தமிழ் இயக்குநர்கள் அட்லீ மற்றும் ஹெச்.வினோத் ஆகியோரும் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

இதில், ஹெச்.வினோத் கூறிய கதை அரசியல் சம்பந்தமான கதை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களோடு தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனியும் விஜய்யிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாலகிருஷ்ணா நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கும் இவரும் விஜய்யிடம் கதை கூறியிருக்கிறார். ஆகையால், அடுத்ததாக யாருடைய கதையில் விஜய் நடிப்பார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில், விஜய்யிடம் கதை கூறிய தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி. விஜய் அரசியலுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

இதனைக் கண்ட ரசிகர்கள், தளபதி 69 படத்தை இந்த இயக்குநர் கூட இயக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். மேலும், விஜய்யின் 69ஆவது படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிப்பதால், கட்டாயம் தெலுங்கு இயக்குநர் தான் படத்தை இயக்குவார் எனவும் வதந்திகள் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here