‘தளபதி 69’ – கதாநாயகிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?..

0
118

‘Thalapathy 69’: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ‘RRR’ படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா, தற்போது விஜய்யின் 69ஆவது படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

ஆனால், இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ‘தளபதி 69’ படத்தை இயக்குவது ‘வெற்றிமாறன்’, ‘கார்த்திக் சுப்பராஜ்’, ‘திரிவிக்ரம்’ என தொடர்ந்து பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது.

சமீபத்தில் கூட ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியிருக்கிறார்.

இந்த கதையை கேட்ட விஜய்க்கு கதை பிடித்துவிட்டதாம், உடனே பண்ணலாம் என கூறிவிட்டாராம். ஆனால், ஏற்கனவே திரிவிக்ரம் கூறிய கதையையும் விஜய் ஓகே பண்ணி வச்சிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது, திரிவிக்ரம் வைத்து படம் எடுக்கலாம் என கூறியதாக தெரிகிறது. திரிவிக்ரம் ஒரு தெலுங்கு இயக்குநர், தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு என்பதால் அவரை வைத்து படத்தை இயக்குவது எளிதாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், விஜய் தரப்பில் ஹெ.வினோத் வைத்து படம் இயக்கலாம் எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது ‘தளபதி 69’ படத்தை ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தளபதியின் 69 படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டிப்போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றனர். கோலிவுட்டில் தற்போது பிஸியான நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரை படக்குழு அணுகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் – திரிஷா காம்போ படங்கள் மெகா ஹிட் படங்களாக மாறிய நிலையில் தற்போது திரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக நடிகை சமந்தாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார்.

விஜய் மற்றும் சமந்தா இருவரும் சேர்ந்து நடித்த ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில் நடித்துள்ளனர். ஆகையால் இவர்களது கூட்டணியில் படம் வெளியானால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என கருதி சமந்தாவிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகையான ஆலியா பட் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தளபதி 69 படத்தில் விஜய்க்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சமீப காலமாக ஒரு செய்தி பரவி வருகிறது.

மேலும், விஜய்க்கு ஜோடியாக இந்த ‘தளபதி 69’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஜய்யின் கடைசி படத்தில் நடிக்கப்போகும் அந்த நடிகை யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here