‘Thandel’: இயக்குந்ர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தண்டல்’. இந்த படத்தை தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார்.
இந்த படம் ஆந்திர மாநிலத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டது. இந்த படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தை அல்லு அர்ஜூன் வெளியிடுகிறார்.
இதில், நாக சைதன்யா மீனவர்கள் தலைவராகவும், சாய் பல்லவி மீனவ பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் நடக்கிறது.
இதற்காக நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் அந்த கிராமத்தில் தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.