சியானுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. பொறி பறக்கும் தங்கலான் போஸ்டர்..

0
102

‘Chiyaan Vikram’: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ‘தங்கலான்’ ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ‘தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்பதால் அதனை ரீ-ஷூட் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது.

அதன் பின்னர் மீண்டும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடாளுமன்ற தேர்தலே காரணம என கூறப்பட்டது.

தங்கலான் படத்தின் முழுப் பணிகளும் முடிந்து, படம் நன்றாக வந்துள்ளதாக இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும், படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் முடிவு செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் தேதி அறிவிப்புக்குப் பிறகு தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொறு அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வரும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே தங்கலான் படத்தின் தணிக்கை பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் சியான் விக்ரமுக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்கலான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here