‘மீண்டும் மீண்டுமா’.. தங்கலான் படம் ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

0
73

Thangalaan: பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ‘தங்கலான்’ ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ‘தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்பதால் அதனை ரீ-ஷூட் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது.

ஆனால், தற்போது மீண்டும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடாளுமன்ற தேர்தல் காரணம என கூறப்படுகிறது. ‘தங்கலான்’ படம் ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படம் தேர்தல் முடிந்த பிறகு ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here