இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..! ‘தங்கலான்’ ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு ரசிகர்கள் கமெண்ட்..!

0
129

Thangalaan’: பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ‘தங்கலான்’ ஜனவரி 26ஆம் தேதி திரைக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ‘தங்கலான்’ படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்பதால் அதனை ரீ-ஷூட் செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போகும் என தகவல் வெளியானது.

அதன் பின்னர் மீண்டும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடாளுமன்ற தேர்தலே காரணம என கூறப்பட்டது.

முன்னதாக ‘தங்கலான்’ படம் ரிலீஸ் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலின் தேதி அறிவிப்புக்குப் பிறகு தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தங்கலான் கட்டாயம் மே 17ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொறு அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வரும். தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே தங்கலான் படத்தின் தணிக்கை பணிகளை தொடங்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் இதையெல்லாம் நம்புற மாதிரி இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக ‘தங்கலான்’ படம் பொங்கலுக்கு வருவதாக கூறப்பட்டது.

பின்னர் பிப்ரவரி மாதம் வெளியாகுவதாக கூறப்பட்டது இவ்வாறு தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் ரசிகர்கள் இவ்வாறு கமெண்ட் செய்ய காரணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here