மாஸாக வெளியான ‘ஃபேமிலி ஸ்டார்’ டீசர்..!

0
138

The Family Star Teaser: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் பாடலான ‘நந்த நந்தனா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ‘X’ தளத்தில் ‘டீசர் வந்துட்டுருக்கு’ என்ற பதிவை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது.

எந்த டீசர், யாருடையர் படத்தின் டீசர் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா தனது ‘X’ தளத்தில் ஃபேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் டீசர் இன்று (மார்ச்.4) வெளியாகியுள்ளது. இதனை தில்ராஜூ தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தொடர்ந்து, இந்த ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால், படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here