‘The Goat Life’: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட்ஸ் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘நஜீப்’ எனும் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.
கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு மாட்டி கொண்டு அடிமையான ஒருவரது கதை தான் இந்த ‘தி கோட்ஸ் லைஃப்’.
இந்த நிலையில் தற்போது ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் ‘Hope Song’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படம் வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.