‘தி கோட் லைஃப்’.. இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

0
81

The Goat Life: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். இவர் தற்போது 2008ஆம் ஆண்டு வெளியான ‘ஆடு ஜீவிதம்’ எனும் மலையாள நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ‘தி கோட் லைஃப்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கியுள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், சுனில் கே.எஸ்.ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘தி கோட்ஸ் லைஃப்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் ‘நஜீப்’ எனும் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28ஆம் தேதி வெளியானது.

படம் வெளியான முதல் நாள் மட்டும் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. மேலும், மலையாளப் பதிப்பில் மட்டும் ரூ.6.50 கோடிக்கு மேலாகவும், மற்ற மொழி பதிப்புகளில் ரூ.1 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்தது.

இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ‘தி கோட்ஸ் லைஃப்’ படம் ரூ.6.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் இரண்டு நாளில் ரூ. 14.10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here